முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.50.90 லட்சம்
By DIN | Published On : 28th February 2019 10:53 AM | Last Updated : 28th February 2019 10:53 AM | அ+அ அ- |

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. காணிக்கைகள் மூலமாக ரூ.50.90 லட்சம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நிகழ் மாதத்துக்கான காணிக்கை எண்ணும் கருடாழ்வார் சன்னதி அருகே கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ரூ.50.90 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம், 899 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் 648 கிடைத்தது. கடந்த மாதத்தைக் காட்டிலும் ரூ.10 லட்சம் குறைவாகக் கிடைத்துள்ளது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி,ஐயப்பா சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.