எல்லைப் பிடாரி இரணியம்மன் திருக்கோயிலில் காளியாவட்டம்

திருவானைக்கா அருள்மிகு எல்லை பிடாரி இரணியம்மன் திருக்கோயில் மாசித் திருவிழா காளியாவட்டத்தையொட்டி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவானைக்கா அருள்மிகு எல்லை பிடாரி இரணியம்மன் திருக்கோயில் மாசித் திருவிழா காளியாவட்டத்தையொட்டி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இக்கோயில் மாசித் திருவிழாவையொட்டி பிப்.12,19 தேதிகளில் முதல் மற்றும் மறுகாப்புக் கட்டுதல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, பிப்.24 ஆம் தேதி யானை வாகனத்தில் அம்மன் புறப்பாடுடன் திருவிழா தொடங்கியது. 25 ஆம் தேதி குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவானைக்கா பகுதி முழுவதும் இரணியம்மன் காட்சியளித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் காளி புறப்பாடு என்றழைக்கப்படும் காளியாவட்டம் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முறையாக காப்புக் கட்டி  நடைபெற்றது. இதையொட்டி  செவ்வாய்க்கிழமை இரவு காளி வேடம் தரித்தவர் சன்னதி வீதி காளிகோயிலிருந்து புறப்பட்டு, திருவானைக்கா கோயிலுக்குச் சென்று மரியாதை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து வடக்குத் தெரு வழியாக வந்த அவர், அப்பகுதியில் அடசல் எனப்படும் அசைவ உணவுப்  படையலை முகர்ந்துவிட்டு, தெற்குத் தெரு, மேலவிபூதிபிரகாரம், ஒற்றைத் தெரு வழியாக இரணியம்மன் கோயிலைச் சென்றடைந்தார்.
தேர் புறப்பாடு: மேலக்கொண்டையம்பேட்டையிலிருந்து சிலம்பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வந்து ஆட்டை பலிகொடுத்த பின்னர்தான் புறப்பாடு தொடங்கியது. புதன்கிழமை  மாலை திருத்தேரில் எழுந்தருளிய இரணியம்மன், மார்ச் 2 ஆம்தேதி வரை திருவானைக்கா பகுதி முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.அப்போது பக்தர்கள் மாவிளக்கு போட்டு, ஆடு பலி கொடுத்து வழிபடுவார்கள். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com