சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.04 கோடி
By DIN | Published On : 28th February 2019 10:51 AM | Last Updated : 28th February 2019 10:51 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தியதன் மூலம் ரூ. 1.04 கோடி கிடைத்துள்ளது.
பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுவதுவழக்கம். அதன்படி, புதன்கிழமை கோயில் மண்டபத்தில் இணை ஆணையர் சி.குமரதுரை தலைமையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரூ.1.04 கோடி ரொக்கம், 2கிலோ 855 கிராம் தங்கம், 10 கிலோ,810 கிராம் வெள்ளி, 297 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தது.
திருவானைக்கா கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா, உதவி ஆணையர் சூர்யநாராயணன், கோயில் மேலாளர் இரா. ஹரிஹரசுப்ரமணியன் முன்னிலையில் தன்னார்வலர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.