Enable Javscript for better performance
சாலையை செப்பனிடக் கோரி ஆட்சியரிடம் மமக மனு- Dinamani

சுடச்சுட

    

    சாலையை செப்பனிடக் கோரி ஆட்சியரிடம் மமக மனு

    By DIN  |   Published on : 08th January 2019 08:43 AM  |   அ+அ அ-   |    |  

    திருச்சி  திடீர்நகர் பகுதியில் சாலையை செப்பனிட வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை கட்டடப் பொருள்களுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
    திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு, மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் எம்.அப்துர் ரஹீம் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் திடீர் நகரைச் சேர்ந்த சிலரும் வந்தனர். அவர்கள் கட்டடம் கட்ட பயன்படுத்தக்கூடிய பொருள்களுடன் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பது:  திருச்சி மாநகராட்சி  29ஆவது வார்டில் திடீர்நகர் பகுதியில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இச்சாலையை செப்பனிட வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என தெரிவித்திருந்தனர். மேலும், சாலையை செப்பனிட வலியுறுத்தி அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாலத்தை அகலப்படுத்தக் கோரிக்கை: அம்பிகாபுரம் பிரதானச் சாலையை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் அண்ணா தெருவில் அமைக்கப்பட்டு வரும் பாலம் 15 அடியில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே இப்பாலத்தை 21 அடியில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  நச்சினார்தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் நா.பன்னீர் செல்வம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
    அரசு அனுமதி பெறாத நர்சரிப் பள்ளியை மூடவேண்டும்: திருச்சி மாவட்டத்தில் அரசு அனுமதி பெறாத 97 நர்சரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை உடனடியாக மூட உத்தரவிடுவதுடன் அங்கு பயின்று வரும் மாணவர்களை மாற்றுப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்புக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ப.முருகானந்தம் தலைமையில் அக்கழகத்தினர் அளித்தனர்.
    ரயில்வே சுரங்கப்பாதை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும்: திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் அப்பாத்துறை ஊராட்சிக்கு உள்பட்ட மேலவாளாடி வழியாக  செல்லும் ரயில்வே பாதையில் சுரங்கப்பாதை  அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது. சுரங்கப்பாதை அமைத்தால் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலையும், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும். ஆகவே, ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை  நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெ.மூர்த்தி,மேலவாளாடி முன்னாள் கவுன்சிலர் குருசாமி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரகுமாரி உலகநாதன் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp