Enable Javscript for better performance
திருச்சியில் 27 புதிய பேருந்துகள் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேலும் 27 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வடிவமைக்கப்பட்ட புதிய பேருந்துகளின் இயக்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த 7ஆம் தேதி தொடக்கி வைத்தார். இதில், கும்பகோணம் கோட்டத்துக்கு 111 பேருந்துகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இங்கிருந்து திருச்சி மண்டலத்துக்காக 27 புதிய பேருந்துகள் வந்துள்ளன. இந்த பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேருந்துகளின் இயக்கத்தை தொடக்கி வைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், செய்தியாளர்களிடம் கூறியது:
    அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், மக்களுக்கு சிறப்பான முறையில் போக்குவரத்து வசதி செய்துதரவும் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் 21,678 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய வழித்தடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இணையதளம் மூலம் முன்பதிவு வசதியும் வந்துவிட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த 27 பேருந்துகளானது அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருச்சி புறநகர், கண்டோன்மென்ட், மணப்பாறை, துவரங்குறிச்சி, பெரம்பலூர், ஜெயங்கொண்டம், உப்புலியபுரம், துறையூர் ஆகிய கிளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
    மேலும், இந்த பேருந்துகள் திருச்சியிலிருந்து திருப்பூர், விழுப்புரம், காஞ்சிபுரம், கோவை, கம்பம், வேளாங்கண்ணி, பழனி, கடலூர், மதுரை, சென்னை, சிதம்பரம், தஞ்சாவூர், சேலம் ஆகிய வழித்தடங்களில் செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன என்றார் அமைச்சர்.
    நிகழ்ச்ச்சியில், ஆட்சியர் கு.ராசாமணி, அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் குணசேகரன், கோட்ட மேலாளர் வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai