சுடச்சுட

  

  பெண்களுக்கான சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
  திருச்சி ஒய்டபிள்யூசிஏ மாவட்ட விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வழக்குரைஞர் வி. கனிமொழி பேசியது: இந்திய அரசியலமைப்பின் சட்டங்கள் பலவற்றில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும் பல்வேறு பிரிவுகள் உள்ளன.
  இந்தச் சட்டப்பிரிவுகள் குறித்து பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு தனிச்சட்டங்கள் இயற்ற, அரசியல் சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது. இதனடிப்படையில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதேபோல, மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை பெண்கள் ஒவ்வொருவரும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய சட்ட நெறிமுறைகளை அறிந்தால் மட்டுமே சமுதாயத்தில் பெண்களால் வெற்றி பெற முடியும் என்றார். 
  நிகழ்ச்சியில், குடும்ப நல ஆலோசகர் டி. ரோஸி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  ஏற்பாடுகளை, பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை முதலாமாண்டு சமூகப் பணித்துறை மாணவி ஆர். அகிலா செய்திருந்தார். இதில், விடுதி மாணவிகள், ஆசிரியர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai