சுடச்சுட

  

  பொங்கல் பண்டிகையையொட்டி  காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே ஜன.14 முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து

  By DIN  |   Published on : 12th January 2019 07:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14 ஆம் தேதி முதல், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது.
  இது குறித்து திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் போக்குவரத்து சில நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொங்கல் திருநாளை கருத்தில் கொண்டு இந்த பயணிகள் ரயில் போக்குவரத்து ஜனவரி 14 முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
  வார நாள்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் இந்த ரயில்(எண். 06856), காலை 9.45-க்கு காரைக்குடியிலிருந்து புறப்பட்டு கண்டனூர் புதுவயல், பெரியக்கோட்டை, வளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயிங்குடி, பேராவூரணி, ஒட்டாங்காடு ரயில் நிலையங்களில் நின்று, பின்னர் பகல் 12.30-க்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை அடையும். எதிர் மார்க்கத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து பகல் 1.30-க்கு புறப்படும் ரயில் (எண். 06855) பிற்பகல் 4.20-க்கு மீண்டும் காரைக்குடியை சென்றடையும்.  ஜூலை  4 ஆம் தேதி வரை இந்த பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai