சுடச்சுட

  

  திருச்சி மாவட்டத்தில் உள்ள 205 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு  ரூ.10.25 லட்சம் நிதியுதவி வழங்கியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
  இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மழைக்காலங்களில் அவர்கள் தொழில் செய்ய இயலாத நிலையை கண்டறிந்து அரசின் சார்பில் பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 2018-2019 வரையிலான ஆண்டில்  205 பேருக்கு அவரவர் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10.25 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai