திருச்சியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

திருச்சி தில்லைநகரில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருச்சி தில்லைநகரில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கௌரா பதிப்பகக் குழுமம் சார்பில் தில்லைநகர் 2 ஆவது தெருவில் உள்ள எஸ்.ஆர்.டி. ஹாலில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு தூயவளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை தலைவர் பி.செல்வக்குமரன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட மைய நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், தேசியக் கல்லூரி தமிழாய்வுத் துறை தலைவர் தலைவர் ச.ஈஸ்வரன், பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத் துறை இணைப் பேராசிரியர் விஜயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கௌரா பதிப்பகக் குழுமத்தின் உரிமையாளர் ஜெய்கணேஷ் ராஜசேகரன் வரவேற்று பேசினார்.
திருச்சி மாவட்ட கலை பண்பாட்டுத் துறையின் இணை இயக்குநர் ரா.குணசேகரன் புத்தக கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டார். இதில்,  தினமணி திருச்சி பதிப்பின் சார்பில் புத்தக அரங்கு உள்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட  அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை, கவிதை நூல்கள், வரலாற்று நூல்கள், ஆன்மிகம், இலக்கியம், இதழியல் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் என ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தொடக்க விழாவில் காவேரி மகளிர் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் ச.ராமலெட்சுமி, முத்தமிழ் மன்றத்தின் துணைத் தலைவர் ச.மணிவண்ணன்,துணைப் பொதுச் செயலாளர் செ.ராமசெயம், கப்பல் கவிஞர்.கி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சி ஜனவரி 20 ஆம் தேதி வரை நடைபெறுவதாகவும், விற்பனையாகும் புத்தகங்கள் அனைத்துக்கும் 10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்க இருப்பதாகவும் கௌரா பதிப்பக உரிமையாளர் ஜெய்கணேஷ் ராஜசேகரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com