புள்ளியியல் விரிவுரையாளர் பணிக்கு இன்று எழுத்துத் தேர்வு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புள்ளியியல் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புள்ளியியல் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த போட்டித் தேர்வு சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை என இரு பிரிவுகளாக நடைபெறுகிறது. இஆர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் தயார் செய்யப்பட்டுள்ளது. 69 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
தேர்வுப் பணிக்கென முதன்மைக் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள நடமாடும் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக் குழுவிற்கு துணை வட்டாட்சியர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் ஒரு அலுவலர், ஒரு வருவாய் உதவியாளர் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர், அலுவலக உதவியாளர் இடம்பெறுவர். மையங்களில் திடீர் ஆய்வு செய்ய துணை ஆட்சியர் நிலையில் பறக்கும்படையினர் நியமிக்கப்பட்டுள்ளது. விடியோகிராபர் நியமனம் செய்யப்பட்டு தேர்வு பணிகள் முழுமையாக பதிவு செய்யப்படவுள்ளது.
தேர்வு மையத்துக்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்துக்கு சென்றுவர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தேர்வு எழுத வரும் நபர்கள் செல்லிடப்பேசி உள்ளிட்ட எந்தவகையான மின்னனு சாதனங்களும் மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை. தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடாமல் விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என ஆட்சியர் கு. ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com