சுடச்சுட

  


  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வேதியியல் துறையின் சார்பில் அப்பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  பாரதிதாசன் பல்கலைக்கழக வேதியியல் துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு துறை தலைவர் முனைவர் ஆர். ரமேஷ் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் வி.தியாகராஜன் முன்னிலை வகித்தார். விழாவில், வேதியியல் துறையின் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர். 
  விழாவை முன்னிட்டு கோலப்போட்டி, கயிறு இழுத்தல் போட்டிகள், பெண்களின் சிலம்ப விளையாட்டுக்கள், பாட்டிலில் நீர் நிரப்புதல், உரியடிக்கும் போட்டி ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சுவீடன் நாட்டின் பேராசிரியர் ஓலாவும் கலந்து கொண்டார்.
  மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுகளுடன் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
  பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, மண் குடில் அமைத்து புது மண்பானை, செங்கருப்பு எனத் தொடங்கி மாணவ, மாணவிகளுக்கு கபடி, பல்லாங்குழி, தாயம், அச்சுக்கல், எலுமிச்சை ஸ்பூன், சாக்கு போட்டி, மூன்றுகால் ஓட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுடன் சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. 
  இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள், இருபால் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.
  லால்குடி: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ள இருங்களூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடினர். 
  விழாவில் மருத்துவக் கல்லூரி முதன்மையர் ஜேசுதாஸ், துணை இயக்குநர் பாலசுப்ரமணியன், மருத்துவக் கண்காணிப்பாளர் ரேவதி, மேலாளர் ராமமூர்த்தி மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவினை முன்னிட்டு மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு உரியடி, கயிறு இழுத்தல் , மாட்டு வண்டி ஊர்வலம் ஆகியவைகள் நடைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai