சுடச்சுட

  


  துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற விழா, இளைஞர் எழுச்சி நாள் விழா மற்றும் பள்ளியின் 78 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஜெயராமன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர். ஸ்ரீனிவாசன் நீ சாதிக்கப் பிறந்தவன் என்ற தலைப்பில் பேசியது:
  அறிவாளிகளை பட்டங்கள் தீர்மானிப்பதில்லை. படிக்காதவர்களை விட படித்தவர்கள் தான் அதிகமாக தவறு செய்கிறார்கள். படிக்காதவர்கள் ஒயிட் காலர் குற்றங்களில் ஈடுபடுவதில்லை. வீட்டில் உள்ள கொசுக்களை அழிக்க ரசாயனங்களை பயன்படுத்தாமல் ஊரில் உள்ள சாக்கடைகளை சுத்தமாக வைத்திருப்பது நல்ல முடிவு. சமுதாயம் நன்றாக இருந்தால் தனிநபரும் நன்றாக இருப்பார். எந்தச் சூழ்நிலையிலும் மதிப்பை இழக்காமலும், சமரசம் செய்து கொள்ளாத மனப்பான்மையுடன், திறனுடன், அறிவுடனும் இருக்கும் எவரும் வாழ்வில் வெற்றியடையலாம். ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட நாட்டினரை வெற்றிக் கொள்ள ஆங்கிலம் படிக்கலாம். ஆனால் தாய்மொழி தமிழை காக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு என்றார்.
  தொடர்ந்து இலக்கியம் மற்றும் விளையாட்டு மற்றும் கடந்த ஆண்டு 10,12 வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கம், சான்றுகள், ரொக்கம் வழங்கப்பட்டது. 
  நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai