சுடச்சுட

  

  11 வட்டங்களில் ஜன.19இல் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்

  By DIN  |   Published on : 13th January 2019 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஜன.19) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
  இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிழக்கு வட்டத்தில் அய்யப்பநகர், திருச்சி மேற்கு வட்டத்தில் அண்ணாநகர், ஸ்ரீரங்கம் வட்டத்தில் கீழஉள்வீதி, மணப்பாறை வட்டத்தில் நடுப்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் செவந்தாம்பட்டி, லால்குடி வட்டத்தில் நெஞ்சலக்குடி, மண்ணச்சநல்லூர் வட்டத்தில் தீராம்பாளையம், முசிறி வட்டத்தில் கீழகண்ணுகுளம், துறையூர் வட்டத்தில் மினி 
  சூப்பர் மார்க்கெட், தொட்டியம் வட்டத்தில் மேயக்கல்நாயக்கன்பட்டி, திருவெறும்பூர் வட்டத்தில் துவாக்குடிமலை-1 ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம்.அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்றார் ஆட்சியர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai