புத்தாநத்தத்தில் ஞானவேல் முருகன் ரதயாத்திரை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ்க்கடவுள் ஞானவேல் முருகன் ரதயாத்திரை புதன்கிழமை நடைபெற்றது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ்க்கடவுள் ஞானவேல் முருகன் ரதயாத்திரை புதன்கிழமை நடைபெற்றது. 
புத்தாநத்தம் அருகேயுள்ள பாறைப்பட்டி, மாலைக்கட்டுப்பட்டி சந்திப்பில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ ஞானவேல் முருகன் வீற்றிருக்க, ரதத்திற்கு முன் சிவன், அம்மன் வேடம் அணிந்தும், தேவேந்திர இசையுடன் கூடிய கிராமிய இசை, தாரை, தப்பட்டைகள், கொங்கு மேளத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பொருளாளர் என்.ஆர்.என். பாண்டியன் யாத்திரையை தொடங்கி வைத்தார். 
திருச்சி சரக காவல் துறை டி.ஐ.ஜி. லலிதா லெட்சுமி, மாவட்ட எஸ்.பி ஜியாஹுல் ஹக் ஆகியோர் தலைமையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணியளவில் ரதம் சர்ச்சைக்குரிய இடத்தை கடந்து சென்றது. யாத்திரை புத்தாநத்தம் கடைவீதி, இடையப்பட்டி வழியாக வடக்கு இடையப்பட்டி ஞானமலையை ரத ஊர்வலம் அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்திய பின் தமிழ்க்கடவுள் முருகன், ஞானமலை மீது வைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com