பெண்ணுக்கு கொலை மிரட்டல்:6 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 29th January 2019 04:15 AM | Last Updated : 29th January 2019 04:15 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இடத் தகராறில் பெண்ணிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது முசிறி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் மனைவி கீதா (47). இவருக்கும், அதே பகுதியைச்சேர்ந்த வே. மாரிமுத்து, பி.செல்வம், ஈ. செல்வம் (எ) கருப்பன், ஈ. மதியழகன், மு. நடேசன், விஜயானந்தன் ஆகிய 6 பேருக்கும் கடந்த 7 ஆண்டுகளாக இடப்பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள ஒண்டிகருப்பு கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றபோது, கீதா வீட்டு முன்பு மாரிமுத்து, செல்வம், கருப்பன், மதியழகன் உள்ளிட்ட சிலர் நின்று கொண்டு கீதாவை தகாத வார்த்தையால் திட்டி, வீட்டைத் தீ வைத்து எரித்து விடுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கீதா போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் மேற்குறிப்பிட்ட 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.