திமுக ஆட்சியில் தொலைநோக்கு திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை

தொலைநோக்குத் திட்டங்கள் எதையும் திமுக உள்ளிட்ட கட்சியினர், தங்கள் ஆட்சியின்போது கொண்டு

தொலைநோக்குத் திட்டங்கள் எதையும் திமுக உள்ளிட்ட கட்சியினர், தங்கள் ஆட்சியின்போது கொண்டு வரவில்லை என்றார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
திருச்சியில் பிற கட்சிகளைச் சேர்ந்தோர் பா.ஜ.க.வில் இணையும் விழா  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த அவர் அளித்த பேட்டி:
ஒரே தேசம் - ஒரே தேர்தல், என்பது போல்,  ஒரே தேசம் - ஒரே குடும்ப அட்டை என்பதும் சிறப்பான திட்டமாகும்.  நாடு முழுவதும் ஒரே அட்டை  என்றபோது,  எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்துக்கான அடிப்படை 2011-–12 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. அரசு எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையுடன், அந்தத் திட்டத்தை கொண்டு வந்தவர்களே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
 மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். பொய் பிரசாரம், எதிர் விமர்சனங்களால்தான் திருச்சி உள்பட பல தொகுதிகளில் எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, இனிமேல் எதிர்விமர்சனங்களை பா.ஜ.க., முறியடிக்கும்.
நாடு முழுவதும் 60 சதவிகிதம் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதனால்தான்  மழைநீர் சேகரிப்புக்கும், தண்ணீர் சிக்கனத்துக்கும் பிரதமர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் அவர்களது ஆட்சியின்போது, தொலைநோக்குத் திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. அதனால், நதிநீர், மழைநீர் சேகரிப்புப் பற்றி பேசுவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் அவர்களுக்கில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com