சுடச்சுட

  

  மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவராக சுமதி ரவிச்சந்திரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
  திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த அம்பேஷ் உப்மன்யூ ஆக்ராவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை அஞ்சல்துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த சுமதி ரவிச்சந்திரன் மத்திய மண்டலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட சுமதி ரவிச்சந்திரனுக்கு, அஞ்சல் சேவைகள் இயக்குநர் தாமஸ் லூர்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai