சுடச்சுட

  

  திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டு கைதிகளை அடைத்து வைப்பதற்கான முகாம் சிறை உள்ளது. 
  இங்கு தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை, நைஜீரியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த 54 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். 
  இதில் இலங்கையைச் சேர்ந்த மகேந்திரன், தனக்கான தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருப்பதாகவும், உடனடியாக தன்னை விடுவிக்கக் கோரியும் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  முகாம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், சிறை நிர்வாகத்தினர் அளித்த உணவுகளை உண்ண மகேந்திரன் மறுத்துவிட்டார். எனினும் சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai