திருச்சியில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்
By DIN | Published On : 13th July 2019 07:24 AM | Last Updated : 13th July 2019 07:24 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மகா மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தில்லி மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி திருச்சி நீதிமன்றங்களில் 13 மக்கள் நீதிமன்ற அமர்வு, மணப்பாறை, முசிறி, லால்குடி மற்றும் துறையூரில் தலா 1 மக்கள் நீதிமன்ற உறுப்பினர்களை கொண்ட அமர்வும் ஆக மொத்தம் 17 அமர்வுகளில் நடைபெறவுள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், ஜீவனாம்சம் கோரிய வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு கோரிய வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான நந்தினி செய்கிறார்.