மாங்கனாப்பட்டியில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
By DIN | Published On : 13th July 2019 07:25 AM | Last Updated : 13th July 2019 07:25 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கருமலையை அடுத்த மாங்கனாப்பட்டியில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருப்பதாகவும் மேல்படிப்புக்கு செல்லும் குழந்தைகள் சுமார் 7 முதல் 10 கிமீ தொலைவு சென்றுதான் படிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், அதற்கு முறையான பேருந்து வசதியில்லை என்றும், பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறிய பொதுமக்கள் அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சமரசம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.