சுடச்சுட

    

    விமான நிலையத்தில் ரூ.10.24 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 14th July 2019 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.10.24 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
    திருச்சியில் இருந்து சனிக்கிழமை சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 
    அப்போது காரைக்காலைச் சேர்ந்த மணிவண்ணன்  (37) என்பவர் ரூ. 10.24 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ, ஸ்டெர்லிங், கத்தார் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றது தெரியவந்தது. 
    இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai