பீடி, சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 19th July 2019 04:49 AM | Last Updated : 19th July 2019 04:49 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பீடி, சுரங்கம், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.250 முதல் ரூ.15 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15-ஆம் தேதி முதல் மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். இந்தத் திட்டத்துக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும். வரும் அக்.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0462-2578266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இதுதொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மத்திய தொழிலாளர் நல ஆணையர் பழ. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.