தேமுதிகவினர் ஆலோசனை
By DIN | Published On : 22nd July 2019 09:40 AM | Last Updated : 22nd July 2019 09:40 AM | அ+அ அ- |

துறையூர் ஒன்றிய தேமுதிக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட துறையூர் ஒன்றிய தேமுதிக செயலர் வழக்குரைஞர் கே.செல்லதுரை தலைமையில் நடைபெற்றது. துணைச் செயலர் வி. எஸ் .சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் என். மகாலிங்கம், கிருஷ்ணசாமி, மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் ஆர் .கே .பி .சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், துறையூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளிலும் முறையாகவும் சீராகவும் குடிநீர்வழங்க ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை விடுப்பது, விஜயகாந்த் பிறந்தநாள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் துறையூர் ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.