தையல் தொழிலாளி மயங்கி விழுந்து பலி
By DIN | Published On : 24th July 2019 09:11 AM | Last Updated : 24th July 2019 09:11 AM | அ+அ அ- |

திருச்சியில் தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி தென்னூர் அண்ணா நகர் சிவப்பிரகாசம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (48) . அதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் தையலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மதுப்பழக்கமும் உள்ளது. இது குறித்து அவருடன் சென்ற, அவரது உறவினரிடம் விசாரித்தபோது, அவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே மதுபோதையில் கிடப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து அன்றையதினம் அதிகாலை உறவினர்கள் அவரை மீட்கச் சென்றபோது அவர் மயங்கி விழுந்து கிடப்பது தெரியவந்தது.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து தில்லைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.