Enable Javscript for better performance
கத்திக்குத்தில் காயமடைந்த ரயில்வே காவலர் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இடத்தகராறில் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த ரயில்வே காவலர் புதன்கிழமை உயிரிழந்தார்.
    மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உளுந்தகுடி பாளையநல்லூரைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் (55).  ரயில்வே காவலராகப் பணியாற்றி வந்த இவருக்கும், இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த வண்ணமணி மகன் கோவேந்திரனுக்கும் (35) இடையே சந்துப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்தது.
    இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி  ஏற்பட்ட தகராறின் போது,  ரெங்கராஜை  கோவேந்திரன் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி ரெங்கராஜ் புதன்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து கோவேந்திரன், அவரது தந்தை வண்ணமணியை கைது செய்தனர். தற்போது ரயில்வே காவலர் உயிரிழந்துவிட்டதால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai