Enable Javscript for better performance
கல்லூரி மாணவியிடம் நகைபறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவியிடம், 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருவெறும்பூர் விஜயநகரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(53). இவரது மகள் சுவேதா(19). தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். செவ்வாய்கிழமை கல்லூரி முடிந்து, தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில்  சுவேதா வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். 
    அரியமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது,  இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், சுவேதா அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில்,  அரியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து நகையைப் பறித்துச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai