Enable Javscript for better performance
கல்வி வளாகம் அருகே புகையிலை பொருள்கள் விற்கக்கூடாது: டி.ஐ.ஜி. எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கல்வி வளாகம் அருகே புகையிலை பொருள்கள் விற்கக்கூடாது: டி.ஐ.ஜி. எச்சரிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வி நிறுவனங்கள் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதோ, விநியோகிப்பதோ கூடாது என திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவர் (டிஐஜி) பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
    கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் ( சுமார் 91 மீட்டர் தொலைவுக்குள் ) புகையிலை மற்றும் புகை, போதைப் பொருள்களை விற்பனை செய்யவோ, விநியோகிக்கவோ கூடாது. 
    மேலும் 18 வயதுக்குள்பட்ட இளையோருக்கு புகையிலை மற்றும் புகைப் பொருள்களை விற்பனை செய்வதோ, விநியோகிப்பதோ கூடாது.   இதையும் மீறி புகையிலைப் பொருள்கள், போதைப் பொருள்கள் மற்றும் புகைப் பொருள்களை விநியோகிக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
    விநியோகிக்கும் விற்பனையாளர்களின் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai