Enable Javscript for better performance
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி- Dinamani

சுடச்சுட

    

    தா.பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
    தாத்தையங்கார்பேட்டை அருகிலுள்ள ஊருடையாப்பட்டியைச் சேர்ந்தவர் சி. சௌந்தராஜன் (55). மின் மோட்டார் பழுது நீக்கும் தொழிலாளியான இவர், புதன்கிழமை கரிகாலி கிராமத்திலுள்ள ராமர் தோட்டக் கிணற்றில் பழுதான மின் மோட்டாரை சரி செய்ய சென்றார்.
    பணி முடிந்த பின்னர் கயிற்றை பிடித்துக் கொண்டு கிணற்றிலிருந்து ஏறிய போது, கைப்பிடி தளர்ந்தது. இதனால் சௌந்தராஜன் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தகவலறிந்த உப்பிலியபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ப. சத்தியவர்தன் தலைமையிலானோர் அப்பகுதிக்குச் சென்று,  சௌந்தராஜனை கட்டிலில் படுக்க வைத்து கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டனர்.
     தீயணைப்பு வீரர்களிடம் தனக்கு இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் வலி இருப்பதாக கூறியதால், உடனடியாக 108 ஆம்புலன்ஸில் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சௌந்தராஜன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து தா.பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai