Enable Javscript for better performance
குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில்  குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கோரி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     திருச்சி மாநகரில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும், இப்ராஹிம் பூங்கா அருகிலுள்ள மகப்பேறு மருத்துவமனையைத் திறக்க வேண்டும்.  கோட்டை வாசல் பகுதியிலுள்ள கழிவறையைத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,  மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டப் பொருளாளர் கே.கே.முருகேசன் தலைமை வகித்தார்.   நிர்வாகிகள் பி.கே. ஜெயக்குமார், குணசேகரன், நாகப்பா சண்முகம், சுதாகர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் ஏ.கே.திராவிடமணி,  மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் அண்ணாதுரை, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் எம். செல்வகுமார்,  ஏஐடியுசி மாவட்டத் தலைவர் க. சுரேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai