Enable Javscript for better performance
குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு ரூ1.05 கோடி மானியம்- Dinamani

சுடச்சுட

    

    குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு ரூ1.05 கோடி மானியம்

    By DIN  |   Published on : 25th July 2019 10:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்டத்தில் குறு,  சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்காக ரூ. 1.05 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட  ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
    தமிழகத்தில்  வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், 2019-20 
    ஆம் நிதி ஆண்டில் அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 
    அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 175 பேர் சுயதொழில் தொடங்கி  பயன் பெறும் வகையில், ரூ. 1.05 கோடி மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது.
    படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்கலாம். இதில்  உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ. 10 லட்சமும், சேவைப்பிரிவில் ரூ. 3 லட்சம், வர்த்தகப்பிரிவில் ரூ. 1 லட்சம் கடன் வழங்கப்படும். இதில் கடன்பெற  மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். 
    திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் (அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரை) மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்புப் பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.50 லட்சம் வரை இருக்கலாம். 
    திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினர் 10 சதவிகிதமும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவிகிதத் தொகையை தங்களது  பங்காகச் செலுத்த வேண்டும்.
    நேரடியான விவசாயம் தவிர பொருளாதார அடிப்படையில் லாபகரமான தொழில்கள் தொடங்கலாம். 
    இத்திட்டத்தின்கீழ் பயனடைய விரும்புவோர் ‌w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.
    ‌g‌o‌v.‌i‌n/‌u‌y‌e‌g‌p    என்ற இணைதளம் மூலமாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
     விழிப்புணர்வு முகாம்கள்:  மேலும் இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் முசிறி, துறையூர், திருவெறும்பூர், மணிகண்டம் ஒன்றிய அலுவலகங்களில் முறையே ஆக.7, 9,13,16 ஆகிய தேதிகளில் நடைபெறஉள்ளன. 
    மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், திருச்சி-1 என்ற முகவரியில் நேரில் அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai