Enable Javscript for better performance
சங்கீத நாடக அகாதெமி விருது பெற்ற இசைக் கலைஞர்களுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    சங்கீத நாடக அகாதெமி விருது பெற்ற இசைக் கலைஞர்களுக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 25th July 2019 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சியில் அண்மையில் நடைபெற்ற பேராசிரியர் டி.என். கிருஷ்ணமூர்த்தி நினைவேந்தல் நிகழ்வில், நாகசுரஇசைக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
    திருச்சி ரசிக ரஞ்சன சபாவில் நடைபெற்ற பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி நினைவேந்தல் நிகழ்வை தில்லைஸ்தானம் மரபு அறக்கட்டளை நிறுவனர் ராம கௌசல்யா தொடக்கி வைத்தார். தொடர்ந்து, கர்நாடக இசைக்கு திருச்சி மாநகரில் செய்து தரப்பட்டுள்ள பணிகளை எடுத்துரைத்து அவர் பேசினார். தேசியக் கல்லூரி முன்னாள் முதல்வர் சேஷாத்ரி விழாவில் பங்கேற்று, பேராசிரியரின் இசை, கல்விப்பணிகள் குறித்துப்  பேசினார். தொடர்ந்து, ரசிக ரஞ்சன சபா சார்பில் சங்கீத நாடக அகாதெமி விருது பெற்ற திருச்சி நாகசுர இசைக் கலைஞர்கள் காசிம்- பாபு  விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
    இதைத் தொடர்ந்து வயலின் இசைக் கலைஞர் நர்மதாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி சுவாமிநாதன் மிருதங்கத்தையும், ஆலத்தூர் டி. ராஜகணேஷ்  கஞ்சிராவையும்,  கிருஷ்ணசாமி கடத்தையும் பக்க வாத்தியங்களாக இசைத்தனர். விழா நிகழ்வை   டி.கே. நரசிம்மன் தொகுத்தளித்தார். ஏராளமானோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai