Enable Javscript for better performance
சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம்: ரூ.86 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம்: ரூ.86 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

    By DIN  |   Published on : 25th July 2019 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருங்காபுரி வட்டம், வெள்ளையக்கோன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில், 829 பயனாளிகளுக்கு ரூ.86லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வழங்கினார்.
    இந்த முகாமுக்கு ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்து,  வீட்டுமனைப் பட்டா, நத்தம் பட்டாநகல், கணினி சிட்டா,  வாரிசு, இறப்புச் சான்றிதழ்கள், உழவர் அட்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், 829 பேருக்கு   நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    முகாமில் பெறப்பட்ட 910 மனுக்களில் 829-க்குத் தீர்வு காணப்பட்ட நிலையில், எஞ்சிய மனுக்கள் துறை ரீதியான விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
    மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சாந்தி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் பழனிதேவி,  தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஆர்.சந்தானகிருஷ்ணன், துணை இயக்குநர் விமலா,   கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் எஸ். எஸ்தாஷீலா, வட்டாட்சியர் தி. சத்யபாமா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai