Enable Javscript for better performance
சுதந்திரத்துக்கு முன்பே மகளிர் மேம்பாட்டை வலியுறுத்தியவர் பெரியார்- Dinamani

சுடச்சுட

    

    சுதந்திரத்துக்கு முன்பே மகளிர் மேம்பாட்டை வலியுறுத்தியவர் பெரியார்

    By DIN  |   Published on : 25th July 2019 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடு சுதந்திரம் அடைவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே மகளிர் மேம்பாட்டை  வலியுறுத்தியதுடன், அதை  சட்டமாக்கவும் வித்திடவர் பெரியார் என்றார் திருச்சி தூய வளனார் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் தி. நெடுஞ்செழியன் .
    திருச்சிபெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் தமிழாய்வுத் துறை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
    பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து பெண்களிடம் புரட்சி விதையை விதைத்தவர் பெரியார் என்றால் அது மிகையில்லை. அடிமைத்தனம், பெண்ணடிமைத்தனம், குலவழிக்கல்வி, போன்றவற்றுக்கு எதிராக போராடியதுடன், சாதி ஒழிப்புக்காக அரசியல்சாசனத்தை தீ வைத்து எரித்து அதற்காக சிறை சென்றவர்.
     சுதந்திரம் அடைவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே மகளிர் மேம்பாட்டை வலியுறுத்தியதுடன்,  அவற்றுக்காக மத்திய, மாநில அரசுகளை  சட்டம் இயற்றச் செய்த பெருமை பெரியாருக்கு மட்டுமே உண்டு.
    இன்றைய நவீன உலகில் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்றால் அதற்கு பெரியாரும் முக்கியக் காரணம். சாதி ஒழிப்புக்காகவே மதம், கோயில், கடவுள் வழிபாட்டை எதிர்த்தவர். பிற மொழிகளை நேசியுங்கள்,
    ஆனால் தாய்மொழியை மட்டும் சுவாசியுங்கள் என அப்போதே தாய்மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் பெரியார் என்றார் அவர்.
    நிகழ்வுக்கு பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரி முதல்வர் இ. ஜூலி தலைமை வகித்தார்.  பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) அ. கோவிந்தராஜன்,  பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரித் தமிழாய்வுத் துறைத் தலைவர் கா. வாசுதேவன், பேராசிரியர்கள்  வெ. சங்கரநாராயணன், ப. வெங்கடேசன், இரா. கலைச்செல்வி, க. காசிமாரியப்பன், மைதிலி, குணசேகரன், மோரிஜாய், திரைமதி, பிரியா, நூர்ஜகான் மற்றும் மாணவ, மாணவிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai