Enable Javscript for better performance
தமிழ் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் பங்கேற்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 10:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவ, மாணவிகளிடையே  பேச்சு மற்றும் படைப்பாற்றல்களை வளர்க்கும் விதமாக தமிழ் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் திருச்சியில் ஆக.7,9 தேதிகளில் நடைபெறஉள்ளன.
    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே  தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
     11,12ம் வகுப்பு பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், திருச்சி புத்தூர் பிஷப்ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 7 ஆம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கான  போட்டிகள்ஆகஸ்ட் 9 ஆம் தேதியும் காலை 9  மணியளவில் நடைபெறவுள்ளன. 
    இதில் ஒவ்வொன்றுக்கும்  முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000 வழங்கப்படுகின்றது. பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். 
    போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் பற்றிய விவரங்கள் பரிந்துரை படிவத்தில் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள் ஒப்பமிட்டு, போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் அப்படிவம் சேர்க்கப்பட வேண்டும். 
     பங்கேற்கும் மாணவ, மாணவிகள் போட்டி நாளன்று காலை 9 மணிக்குள் வருகையைப் பதிவு செய்திட வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் ‌h‌t‌t‌p://‌t​a‌m‌i‌l‌v​a‌l​a‌r​c‌h‌i‌t‌h‌u‌r​a‌i.​c‌o‌m   என்ற தமிழ்வளர்ச்சித் துறை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டிகளில் முதல் பரிசுப் பெற்றவர்கள் மட்டும் மாநில் அளவிலான போட்டிக்கு பங்கேற்க தகுதியுள்ளது. 
    மாநிலப் போட்டிகள் நடைபெறும் தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai