Enable Javscript for better performance
தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கிய காவல்துறையினர்- Dinamani

சுடச்சுட

    

    தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கிய காவல்துறையினர்

    By DIN  |   Published on : 25th July 2019 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
    அப்போது தலைக்கவசம் அணி ந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 
    மாநகரில் சாலை விபத்துகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. 
    அப்போது தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய மாநகரக் காவல் துணை ஆணையர் ( சட்டம் மற்றும் ஒழுங்கு) என்.எஸ். நிஷா,  விழிப்புணர்வுப் பேரணியையும் கொடியசைத்துத்  தொடக்கி வைத்தார். சத்திரம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி காந்தி மார்க்கெட், பாலக்கரை, தலைமை அஞ்சல் நிலையம் வழியாக மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.  திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ( பொறுப்பு) பிரபாகரன், காவல் உதவி ஆணையர்கள் ஸ்ரீரங்கம் ராமச்சந்திரன்,  போக்குவரத்துப் பிரிவு விக்னேசுவரன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai