Enable Javscript for better performance
தலைமறைவாக இருந்த கல்லூரி ஊழியர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் பேராசிரியர் புகாரில் தலைமறைவாக இருந்த கல்லூரி ஊழியரை, திருவெறும்பூர் போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர். 
    திருவெறும்பூர் வட்டம், வேங்கூரைச்சேர்ந்தவர் நிர்மலா. இவர், காட்டூரிலுள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில்  உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். 
    இவர் கல்லூரியில் பணிபுரிந்து வரும் அலுவலக ஊழியரான சந்தோஷ் கண்ணன் (48), தன்னை ஜாதி  பெயரைச் சொல்லித் திட்டியதாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார்.
    இதன் பேரில்  வழக்குப்பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து சந்தோஷ் கண்ணனைத் தேடி வந்தார். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், திருநகரில்  தலைமறைவாக இருந்த  அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai