Enable Javscript for better performance
துறையூர் சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டுமான பணிக்கு பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    துறையூர் சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டுமான பணிக்கு பூமி பூஜை

    By DIN  |   Published on : 25th July 2019 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துறையூர் நீதிமன்ற வளாகத்தில், சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டுமானப் பணிக்கானபூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
    துறையூர் பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வாரத்தில் ஒரு நாள் செயல்படம் வகையில், சார்பு நீதிமன்ற சார்பு 2011-லிலும்,  நிரந்தர நீதிமன்றம் 2017- லிலும் அமைக்கப்பட்டது.
    ஆயினும் குடியிருப்பு வசதி செய்யப்படாததால் இங்கு பணியாற்றிய சார்பு நீதிபதிகள் வாடகை வீட்டில் குடியிருந்தனர். இந்நிலையில் துறையூர் நீதிமன்ற வளாகத்திலேயே உரிமையியல், குற்றவியல் நீதிபதிகளுக்கு உள்ளது போன்று சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டுவதற்கு ரூ. 77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
    இதைத் தொடர்ந்து இக்கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை  திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மு.முரளிசங்கர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதித்துறை தலைமை நடுவர் கிருபாகரன், துறையூர் சார்பு நீதிபதி மு.சிவகுமார், உரிமையியல் நீதிபதி ஏ.ஆறுமுகம், குற்றவியல் நீதித்துறை நடுவர் எ.புவியரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  துறையூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் த. ராமசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் துறையூர் நீதிமன்ற வழக்குரைஞர்கள், வழக்காடிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai