Enable Javscript for better performance
தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு- Dinamani

சுடச்சுட

    

    புத்தாநத்தம் அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு மீட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.
    புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு, அங்குள்ள கோழிகளை விழுங்கச் சென்றது.
     தோட்டத்தில் இருந்த பணியாளர்கள் மலைப்பாம்பைத் தடுத்து, துவரங்குறிச்சி தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். 
    எனினும் இவ்விரு துறையினரும் வருவதற்கு முன்னரே அங்குள்ளவர்களே பாம்பைப் பிடித்து, நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் மலைப்பாம்பினை அருகிலுள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai