Enable Javscript for better performance
மண்ணச்சநல்லூர் அருகே செல்லிடப்பேசி கடையில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மண்ணச்சநல்லூர் அருகே செல்லிடப்பேசி கடையில்,  ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    மண்ணச்சநல்லூர் வட்டம், வெங்கங்குடியைச் சேர்ந்தவர் ம. துரைப்பாண்டி (23). இவர், திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள நொச்சியத்தில் செல்லிடப்பேசி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார்.
    செவ்வாய்க்கிழமை இரவு விற்பனை முடிந்த பின்னர் கடையை பூட்டிச் சென்ற துரைப்பாண்டி,
    புதன்கிழமை காலை திறக்க வந்த போது,  அங்கிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. 
    மேலும், மேற்கூரைகள் உடைந்தும் காணப்பட்டது.  கடையிலிருந்த செல்லிடப்பேசிகள், உதிரிப் பாகங்கள் போன்றவை திருட்டு போயிருப்பது தெரிய 
    வந்தது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரமாகும்.
    இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் துரைப்பாண்டி புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று தடயங்களைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    இவரது கடையில் 2018, ஜூன் 24 ஆம் தேதி ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு போன நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டனர். 
    நிகழாண்டில் ஏப்ரல் 9 ஆம் தேதி திருட்டு நடைபெற்ற நிலையில், மீண்டும் செவ்வாய்க்கிழமை இரவு திருட்டு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai