Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வியாபாரி பலி- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில்,  பழைய இரும்பு வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
    சங்கிலியாண்டபுரம் இளங் கோ தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (58). பழைய இரும்பு வியாபாரியான இவர், செவ்வாய்க்கிழமை  திருச்சி- புதுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காவலர் குடியிருப்பு எதிரிலுள்ள வளைவுப் பகுதியை கடந்து செல்ல மாரியப்பன் முயன்ற போது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள்  மீது மோதியது.
    இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரியப்பன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai