Enable Javscript for better performance
ரௌடி கொலை வழக்கில்  மேலும் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி அருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    திருவெறும்பூர் அருகிலுள்ள மேல குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் ரஜினி என்கிற கருப்பையா (37). இவர் மீது திருச்சியின் பல்வேறு காவல்நிலையங்களில்  கொலை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்தன. ரௌடி பட்டியலில் உள்ள இவரை, அப்பகுதியில் கடந்த 8 ஆம் தேதி மர்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றது. இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்ததில், பணப்பிரச்னையில் கூலிப்படையினர் இக்கொலை செய்தது தெரிய வந்தது.
    இதுதொடர்பாக  நவல்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்த குருபாகரன் (48) , அவரது மனைவியும், மின்வாரிய அலுவலக இளநிலைப் பொறியாளருமான  நித்யா (38),  கூத்தைப்பார் கார்த்திக் (28) , வ.உ.சி. நகர் சசிகுமார் (22) ,  காட்டூர் விண்நகர் குட்டி என்கிற சுரேஷ்குமார் (44) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மேலும் 2 பேரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். 
    இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கைலாசபுரம் கீழகணபதி நகர் பாட்டில் மணி என்கிற தினேஷ்குமார் (26),  திருவையாறு மேலபுலவாசலைச் சேர்ந்த  எமர்சன் என்கிற பிரசன்னா (27) ஆகிய இருவரையும்  தனிப்படை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்து, மத்தியச் சிறையில் அடைத்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai