Enable Javscript for better performance
லாரி ஓட்டுநர் மர்மச் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி உறையூரில்  சந்தேகத்துக்குரிய முறையில்  இறந்த லாரி  ஓட்டுநர் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர்.
    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் லோகநாதன் (32). லாரி ஓட்டுநரான இவர்,  சென்னையிலிருந்து திருச்சி  உறையூருக்கு பொருள்களை ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை வந்தார்.
    பொருள்களை இறக்கிய பின்னர், அங்குள்ள அலுவலகத்தில் தூங்கச் சென்றார். 
    வெகுநேரமாகியும் லோகநாதன் எழுந்திருக்கவில்லை. சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரை எழுப்பிய போது எழுந்திருக்கவில்லை. 
    இதைத் தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்த போது, லோகநாதன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai