Enable Javscript for better performance
விஏஓ மீதான புகார்களை விசாரிக்க சிறப்புக் குழு நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    விஏஓ மீதான புகார்களை விசாரிக்க சிறப்புக் குழு நியமனம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீதான புகார்களை விசாரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக, திருச்சி மாவ ட்ட ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
    திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரப்பெறும் புகார்களை விசாரணை செய்வதற்காக, துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைமையில், வட்டாட்சியர் மற்றும் ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் வரவேற்புப் பிரிவு வட்டாட்சியர் ஆகிய இருவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
    எனவே, திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது பொதுமக்கள் யாரேனும் புகார் தெரிவிக்க வேண்டுமெனில் ஆட்சியரகத்தில் உள்ள இக் குழுவின் அலுவலகத்திடம் மனுக்களை வழங்கலாம். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai