Enable Javscript for better performance
ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீரங்கம், திருவானைக்காவில் காவிரி, கொள்ளிடம் கரையோரப் பகுதிகளில் நள்ளிரவில் அதிகமாக மாட்டுவண்டியில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது மணல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இரவு நேரங்களில் மாட்டு வண்டியுடன் கொள்ளிடம் வடக்கு வாசல் பகுதியில் இறங்கி மணலை திருடிச் செல்கின்றனர். இதற்கு காவல்துறையும் உடந்தையாக இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காவிரி கரையோரப் பகுதிகளிலும் அதிகமாக மணல் கொள்ளை இரவு நேரங்களில் நடந்து வருகிறது.
    தற்போது காவிரியாற்றில் தண்ணீர் வரும் வேலையில் கரையோரத்தில் மணலை எடுப்பதால் பெரிய பள்ளம் ஏற்பட்டு வருகிறது. 
    இதனால் பொது மக்கள் காவிரி ஆற்றில் குளிக்க செல்லும் போது புதை மணலில் சிக்கும் அபாயம் ஏற்படும். சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai