Enable Javscript for better performance
7,800 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள்- Dinamani

சுடச்சுட

    

    முசிறி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 7,800 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
    முசிறி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், இக்கல்வி மாவட்டத்திலுள்ள 35 மேல்நிலைப் பள்ளிகளில் 2018-19 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற 3,800  பேருக்கும் நிகழாண்டில் பிளஸ் 1 படிக்கும் 4,000  பேருக்கும் என மொத்தமாக 7,800 மாணவ, மாணவிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராசு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினார்.
    முசிறி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் செல்வி,  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பிரின்ஸ் எம். தங்கவேல்,  மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் ரவிச்சந்திரன், அதிமுகஒன்றியச் செயலர்கள்  முசிறி  ராஜமாணிக்கம், தா.பேட்டை ஜெயம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai