முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
காரணிக்குளக்கரையில் கிடந்த விநாயகர் சிலை
By DIN | Published On : 30th July 2019 09:54 AM | Last Updated : 30th July 2019 09:54 AM | அ+அ அ- |

மருங்காபுரி ஒன்றியம், வளநாடு கைகாட்டி காரணிக்குளக்கரையில் கிடந்த விநாயகர் சிலை திங்கள்கிழமை மாலை மீட்கப்பட்டது.
வளநாடு கைகாட்டி காரணிக்குளக்கரையில் சுமார் இரண்டரை அடி உயர விநாயகர் கற்சிலையை, மர்ம நபர்கள் சிலர் வீசிவிட்டு சென்றுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற வளநாடு போலீசார் மற்றும் மருங்காபுரி வருவாய்த்துறையினர் விநாயகர் கற்சிலையை கைப்பற்றினர். மேலும், சிலையை வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.