முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவர் கைது
By DIN | Published On : 30th July 2019 09:54 AM | Last Updated : 30th July 2019 09:54 AM | அ+அ அ- |

திருச்சி மாநகரில் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
உறையூர் நாச்சியார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சிம்பு (29). தள்ளுவண்டியில் சாலை ரோட்டில் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 14 ஆம் தேதி இக்கடைக்கு வந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கௌரிசங்கர் (30), கத்தியைக் காட்டி சிம்புவிடம் ரூ.4 ஆயிரத்தை பறித்துச் சென்றார்.
மண்ணச்சநல்லூர் வட்டம், வெங்கங்குடி கோல்டன் சிட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (34). கடந்த ஜூன் 6 ஆம் தேதி திருவானைக்கா உள்வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பஞ்சக்கரையைச் சேர்ந்த சத்தியகிரி (25), தனது நண்பருடன் சேர்ந்து சரவணனை அரிவாளால் வெட்டினார்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக உறையூர், ஸ்ரீரங்கம் போலீஸார் தனித்தனியே வழக்குப்பதிந்து கௌரிசங்கர், சத்தியகிரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவர் மீதும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கௌரிசங்கர், சத்தியகிரியை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இதற்கான ஆணை நகல் சிறையிலுள்ள இருவருக்கும் வழங்கப்பட்டது.