முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
குளிர்சாதனப் பெட்டியில் கோளாறு: ஒரு மணி நேரம் தாமதமாக சென்ற தேஜஸ் ரயில்
By DIN | Published On : 30th July 2019 09:55 AM | Last Updated : 30th July 2019 09:55 AM | அ+அ அ- |

குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தேஜஸ் அதிவேக விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக திருச்சியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.
சென்னை- மதுரை இடையே இயக்கப்படும் இந்த ரயில், காலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரையைச் சென்றடையும். பின்னர், பிற்பகல் 3 மணிக்கு மதுரையிலிருந்து சென்னைக்குப் புறப்படும்.
திங்கள்கிழமை மாலை 5.07 மணிக்கு மதுரையிலிருந்து தேஜஸ் ரயில் திருச்சி வந்தடைந்தது. அப்போது, சி-9 குளிர்சாதனப் பெட்டியில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரிசெய்ய வேண்டும் எனவும் மதுரையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தயாராக இருந்த ரயில்வே தொழில்நுட்பப் பணியாளர்கள் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். இதனையடுத்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு தேஜஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது.
நவீன தொழில் நுட்பம் : நவீன தொழில்நுடப்பத்தில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டபோதிலும், இதுபோன்ற கோளாறுகள் ஏற்படுவதாகவும், இதனால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் இதில் ஏற்படும் தொழில் நுட்பக்கோளாறுகளை, திருச்சி, மற்றும் மதுரையில் உள்ள ரயில்வே தொழிலாளர்களால் உடனுக்குடன் சரிசெய்ய முடிவதில்லை.
சென்னை ஐ.சி.எப். ரயில்வே தொழிற்சாலையில் மட்டுமே இதில் ஏற்படும் கோளாறுகள் சரிசெய்யவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே திருச்சி, மதுரை போன்ற இடங்களிலும் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.