முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மாணவி தற்கொலை வழக்கில் தந்தை கைது
By DIN | Published On : 30th July 2019 09:53 AM | Last Updated : 30th July 2019 09:53 AM | அ+அ அ- |

மணப்பாறை அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது தந்தை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
மணப்பாறையை அடுத்த வேங்கைகுறிச்சி ஊராட்சி, நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ் (38). இவரது மகள் சினேகா(17) மணப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்ததார்.
தாய்- தந்தைக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சினேகா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சினேகாவின் தாய் அம்சு அளித்த புகாரின் பேரில், மணப்பாறை போலீஸார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கு காரணமான செல்வராஜை திங்கள்கிழமை கைது செய்தனர்.