முசிறி பகுதிகளில் ஜூன் 1 மின்தடை
By DIN | Published On : 01st June 2019 07:17 AM | Last Updated : 01st June 2019 07:17 AM | அ+அ அ- |

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, முசிறி பகுதிகளில் சனிக்கிழமை ( ஜூன் 1) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முசிறி செயற்பொறியாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முசிறி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் முசிறி, சிங்காரச்சோலை,பார்வதிபுரம்,புதிய பழைய பேருந்து நிலையம்,கைகாட்டி, சந்தப்பாளையம்,அழகாப்பட்டி,திருச்சி, துறையூர் சாலைகள்,சிலோன்காலனி, ஹவுசிங் யூனிட், தண்டலைப்புத்தூர், வேளக்காநத்தம்,அந்தரப்பட்டி, தொப்பலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிப்பட்டி,மணமேடு, சிந்தம்பட்டி, கருப்பணாம்பட்டி,அலகரை, கோடியாம்பாளையம், சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி,திருஈங்கோய்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.